டெலோ இரட்டை வேடம் ?

இலங்கை வரவு செலவு திட்டத்தை எதிர்க்கப்போவதாக டெலோ இரட்டை வேடம் போட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது.
இலங்கையின் 2018ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வாக்களிப்பில் பங்குகொள்ளாது நடுநிலை வகித்தார். வரவு செலவுத் திட்டத்தின் மீதான மாதீடு நேற்றைய தினம் 119 வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது.

இதில் ஐ.தே.முன்னணியும் த.தே.கூட்டமைப்பில் தற்போதும் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 13 பேரும் ஆதரவாக வாக்களித்தனர். இருப்பினும் தற்போதும் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோவின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் வாக்களிக்கவில்லை.  இதேநேரம் குறித்த வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாணிப்பு மீதான விவாத்த்தின்போதும் வாக்களிக்காது நடுநிலைவகித்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் உள்நாட்டு அலுவலகள் மற்றும் மாகாண சபை அமைச்சின் மீதான நிதி ஒதுக்கீட்டு விவாத்த்தில் வாக்கெடுப்பு கோரப்பட்ட சமயம் ஆதரவாக வாக்களித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. ரெலோ அமைப்பின் மற்றுமோர் நாடாளுமன்ற உறுப்பினரான கோடீஸ்வரன் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தார். -

No comments