கைது செய்யப்பட்ட ரிஷாத்தின் சகோதரர் விடுவிப்பு

அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சகோதரர் இன்று கைதுசெய்யப்பட்டிருந்த போதும் உடனடியாகவே அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியல் அழுத்தங் காரணமாகவே அவர் கைது செய்யப்ப்பட்ட உடனோயே விடுவிக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் வழிநடத்தலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நாட்டில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் அவர் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டார்.

எனினும், அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை ரிஷாத் உள்ளிட்டவர்களுக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக மகிந்த அணியின் எம்.பிக்கள் தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments