கூட்டமைப்பு முடிவெடுக்கவில்லையாம்?


வடகிழக்கிற்கு வெளியே கூட்டமைப்பு போட்டியிடுவது குறித்து முடிவு எடுக்கப்படவில்லையென கருத்து வெளியிட்டுள்ளது.குறிப்பாக கொழும்பு மாவட்டத்தில் தேர்தல்களில் போட்டியிடுவது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

“எதிர்வரும் காலங்களில் நடைபெறும் தேர்தல்களில் கொழும்பு மாவட்டத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி போட்டியிட வேண்டும் என்று, கொழும்பு கிளை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்தக் கோரிக்கையை கவனத்தில் எடுத்துக் கொள்வதாகவும், தமது முடிவை கட்சிக்கு அறிவிப்பதாகவும் அவர்களிடம் கூறியிருந்தேன். இந்த விடயம் தொடர்பாக இன்னமும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.கொழும்பில் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது பற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் எந்த முடிவையும் எடுக்கவில்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே கொழும்பில் கூட்டமைப்பு தேர்தல் களத்தில் குதித்தால் தமது கட்சி வடகிழக்கில் போட்டியிடுமென அரச அமைச்சரான மனோகணேசன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments