எழுவர் விடுதலை! உலுக்கியது மனிதச் சங்கிலிப் போராட்டம்!
![]() |
புதுச்சேரி அண்ணாசாலையில் நடைபெற்ற மனிதச் சங்கிலிப் போராட்டம் |
இன்று சனிக்கிழமை நடைபெற்ற மனிதச் சங்கிலிப் போராட்டத்தில்
பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளைச் சேர்ந்த 300 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
மனித சங்கிலி போராட்டத்தில் பேறரிவாளனின் சகோதரி அருள்செல்வி கலந்துகொண்டு அண்ணாவை விடுதலை செய்யுமாறு தமிந்நாடு ஆளுநரை நோக்கிக் கோஷமிட்டார்.
தமிழக அரசின் தீர்மானத்திற்கு தமிழக ஆளுநர் உடனடியாக ஒப்புதல் வழங்கக்கோரி புதுச்சேரி அண்ணா சாலையில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாமக, விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர், திராவிடர் விடுதலைக் கழகம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளை மற்றும் தமிழ் உணர்வாளாகள் எனப் பலரும் இப்போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
Post a Comment