பூமிக்குத் திரும்பியது க்ரூவ் டிறகன் விண்கலம்!

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாஸா மற்றும் SpaceX விண்வெளி ஆய்வு நிறுவனமும் இணைந்து விண்வெளிக்கு உந்திய  க்ரூவ் டிறகன் (CrewDragon) விண்கலம் வெற்றிகரமாக மீண்டும் பூமிக்கு திரும்பியுள்ளது.

கடந்த 2ஆம் திகதி விண்வெளிக்கு சோதனைக்காக உந்தப்பட்ட க்ரூவ் டிறகன் 7 நாட்கள் கடந்த நிலையில் பூமியை வந்தடைந்துள்ளது. புளோரிடா மாநிலத்திற்கு அருகேயுள்ள அட்லாண்டிக் பெருங்கடலில் க்ரூவ் டிறகன் விண்கலம் தரையிறங்கியுள்ளது.

இந்த முயற்சியைத் தொடர்ந்து பூமிக்கு அருகிலுள்ள சுற்றுப்பாதைக்கு மனிதர்களை அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

ஏழு பேர் அமரக்கூடிய இவ்விண்கலத்தில் சோதனைக்காக அனுப்பியபோது அதில் மனிதர்களுக்குப் பதிலாக உருவ பொம்மைகள் வைத்திருந்தனர்.

No comments