அலுக்கோசு வேலைக்கு விண்ணப்பித்த அமெரிக்கர்!

சிறீலங்காவில் தூக்குத் தண்டனை நிறைவேற்றும் அலுக்கோசு வேலைக்கான நேர்முகத் தேர்வுக்கான விண்ணப்பத்தை அனுப்பியுள்ளார்  அமொிக்கர்.

தூக்குத் தண்டனை நினைவேற்றும் அலுக்கோசு வேலைக்கான இரு வெற்றிடங்கள் தேவைப்பட்டபோது, அவ்வேலைக்கான  விண்ணப்பங்களை கோரப்பட்டிருந்தது. இவ்வேலைக்கு இதுவரை 102 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் அமொிக்க நாட்டவரின் விண்ணப்பமும் உள்ளடங்குகின்றது.

அலுக்கோசு வேலைக்கு சிறீலங்கா குடிமக்கள் மட்மே விண்ணப்பிக்க முடியும் என்ற அடிப்படையில் அமெரிக்கரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

102 விண்ணப்பங்களில் 79 பேருக்கு இதுவரை நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments