விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும்; வைகோ!

திமுக கூட்டணியில் உள்ள ம. தி.மு.க கோவை தொகுதியில் போட்டியிடுகிறது. இன்று அதன் தலமை செயலகத்தில் பொதுச்செயலாளர் வைகோ மக்களவைத் தேர்தல் அறிக்கையினை வெளியிட்டு வைத்தார்.

1. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்- மறு ஆய்வு தேவை ( மாநில சுயாட்சி கொண்டு வர வலியுறுத்தபடும் )
2. மேகதாது தடுப்பு அணை கட்டும் முயற்சி முறியடிக்கப்பட்ட வேண்டும்.
3. மீத்தேன்,ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் முழுவதுமாக ரத்து செய்து டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தப்படும்.
4.தமிழ் மொழி இந்தியாவின் ஆட்சி மொழியாக மாற்ற வலியுறுத்தப்படும்.
5. கல்வி மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர வலியுறுத்தபடும்.
6.நதி நீர் இணைப்பு ( அணை பாதுகாப்பு மசோதா ) கொண்டு வர வலியுறுத்தபடும்.
7.பயிர் காப்பீடு, வேளாண் நிதிநிலை அறிக்கை, வேளாண் கடன் தள்ளுபடி உள்ளிட்டவை நிறைவேற்றப்படும்.
8.சரக்கு மற்றும் சேவை வரி ( ஜி.எஸ்.டி ) சீர்திருத்தம் தேவை என்பது வலியுறுத்துப்படும்.
9.தமிழகத்தில் காலியாக உள்ள இடங்கள், தமிழகத்தில் வேலை இல்லாமல் இருக்கும் பட்டதாரி இளைஞர்களுக்கு மட்டுமே 90% வழங்க வேண்டும் என்று திமுக மூலம் வலியுறுத்தபடும்.
10.அணுஉலைகள் இல்லாத மாநிலமாக தமிழகம் மாற்றபடும்.
11.விடுதலை புலிகள் மீதான தடை நீக்க வலியுறுத்தபடும்.தொடர்ந்து பேசிய வைகோ, “நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில், இந்தியாவின் ஜனநாயகத்தைக் காக்க தேர்தல் அறிக்கை தயார் செய்து வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தேர்தல் அறிக்கையின் மூலம் பாசிசத்தை நிலை நாட்டத் துடிக்கின்ற பாஜக அகற்றப்பட வேண்டும், காங்கிரஸ்-திமுக கூட்டணி மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டும் என்று உறுதியாக உள்ளோம்.ஊழல் ஆட்சியை தூக்கி எறிய 40 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளில் திமுக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் எனவும் இந்த ஆண்டு மாற்றத்துக்கான ஆண்டாக அமையும். தமிழகத்தில் தொல்லியல் ஆய்வுகள் முறையாக நடைபெற்று, ஆய்வுகள் வேகப்படுத்த வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தபடும்.விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கப்பட வேண்டும் மற்றும் ஈழத் தமிழர்கள் காணாமல் போனது பற்றி உரிய பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும் என்று தொடர்ந்து போராடப்படும். சில்லறை வணிகத்தில் அயல்நாட்டு முதலீட்டினைத் தவிர்த்து சிறு, குறு வியாபாரிகளின் நலன் பாதிக்காமல் இருக்கத் தொடர்ந்து மதிமுக-திமுக வலியுறுத்தும்.பழைய வாக்குச் சீட்டு முறை மீண்டும் கொண்டு வர வேண்டும். அதிமுக தேர்தல் அறிக்கையில் 1,500 ரூபாய் வழங்கப்படும் என்று தெரிரவித்து வாக்குகளை விலைக்கு வாங்கலாம் என்று நினைக்கிறார்கள். ஏழை எளிய மக்களுக்கு 1,500 ரூபாய் பணம் தருவது எங்களுக்கு மகிழ்ச்சி அதே நேரத்தில் மக்கள் சிந்தித்து வாக்களிப்பார்கள் என்பதும் நிதர்சணம்.மோடிக்கு எதிர்ப்பலைகள் தான் உள்ளது. ஆனால் ராகுலுக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது. ரஃபேல் போன்ற ஊழல்களால் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறிய பாஜக-வினர் நாட்டின் பாதுகாவலன் ( சௌக்கிதார் ) என்று பெயர் வைத்து கொள்கின்றனர்.காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருந்தாலும் , விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்ற எங்கள் கருத்தில் நாங்கள் உறுதியாக உள்ளோம்” எனக் குறிப்பிட்டார்.

No comments