விஜயகாந்தை சீண்டிய வேல்முருகன்!

தமிழக வாழவுரமைக் கட்சி நிறுவனர் வேல்முருகன், உடல்நலக்குறைவு காரணமாகச் சென்னை காவேரி மருத்துவமனையில், 15 நாட்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை முடிவடைந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் மக்களவைத் தேர்தலில் எந்த கட்சியினருடனும் கூட்டணி அமைக்கவில்லை என்றும்  
மக்களவைத் தேர்தல் குறித்து தான் எந்த முடிவும் எடுக்கப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளும் தன்னை நேரடியாகத் தொடர்பு கொண்டு உடல்நலம் குறித்துக் கேட்டறிந்தனர். மேலும், நடைபெறவிருக்கும் தேர்தலில் கூட்டணி அமைத்துக் கொள்ளுமாறு அழைப்பும் விடுத்திருந்தனர். இருந்தபோதும், பதவி வெறிக்காக அலைபவனல்ல நான் , MLA பதவிக்கும் ஆசை படுபவன் அல்ல; அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த போல் அரசியல் செய்பவன் நான் இல்லை. உடல் நிலையைக்கருத்தில் கொண்டு, மருத்துவக்குழு அனுமதித்தால் மட்டுமே தேர்தலில் போட்டியிடுவேன் எனக் கூறினார்.

No comments