மானிப்பாயிலும் காணி பிடிப்பு!


வடகிழக்கு தமிழர் தாயகத்தில் மீண்டும் சத்தம் சந்தடியின்றி படைகளிற்காக தமிழ் மக்களது நிலங்களை சுவீகரிக்கும் முயற்சிகள் ஆரம்பமாகியுள்ளது.காங்கேசன்துறையினை தொடர்ந்து மானிப்பாயில் இலங்கை காவல்துறையினரின் பயன்பாட்டிற்காகவென 6 தனியாருக்குச் சொந்தமான காணிகளை சுவீகரிப்பதற்கான அறிவித்தல் காணி உரிமைநாளர்களிற்கு பிரதேச செயலகம் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மானிப்பாய் காவல் நிலையத்தைச்சூழ, தமிழ் மக்களின் உறுதிக் காணிகளை நீண்டகாலமாக கையகப்படுத்தி வைத்துள்ள காவல்துறை தற்போது அக்காணிகளை தமது பயன்பாட்டிற்காக நிரந்தரமாக கையகப்படுத்து முற்பட்டுள்ளது. 

இதற்காக காணி சுவீகரிப்புச் சட்டத்தை பயன்படுத்தும் முதலாவது அறிவித்தலை நில உரிமையாளர்களிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இவ்வாறு வழங்கப்பட்ட அறிவித்தலின் பிரகாரம் காணி உரிமையாளர்கள் தமது காணிகளை வழங்குவதற்கு தமக்கு எந்தவிதமான இணக்கமோ அல்லது வழங்குவதற்கு சம்மதமோ கிடையாதென பிரதேச செயலாளருக்கு எழுத்தில் வழங்கியுள்ளனர்.

தனியார அறுவருக்குச் சொந்தமான 16 பரப்புக் காணியை உரிமையாளர்களின் சம்மதம் இன்றி அடாத்தாக அபகரித்துள்ள நிலத்திலேயே காவல் நிலையம் இயங்குவதனால் அவ் நிலத்தை வழங்குமாறு உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

No comments