யாழில் உத்தரிப்புக்களின் அல்பம்!

வலிந்து காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் “உத்தரிப்புக்களின் அல்பம்" எனும் ஒளிப்பட கண்காட்சி யாழில் நடைபெறுகின்றது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கடந்த 2 ஆண்டு காலமாக மேற்கொள்ளப்பட்டு வரும், தொடர் போராட்டங்களின் போது, முல்லைத்தீவு ஊடகவியலாளரான கே. குமணனால் எடுக்கபட்ட ஒளிப்படங்களின் தொகுப்பே காட்சிபடுத்தப்பட்டு உள்ளது.

யாழில். தந்தை செல்வாவின் சதுக்கத்துக்கு அருகில் இன்று(16) சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் குறித்த கண்காட்சி நடைபெறவுள்ளது.
இதனிடையே குறித்த ஊடகவியலாளர் தனது புகைப்பட கண்காட்சி பற்றி அறிவித்திருந்த நிலையில் அவரது கமராக்கள் மற்றுடம் மடிக்கணிணி  வீடு உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments