காலடி எடுத்து வைத்த பனிக்கரடி குட்டி! பார்க்க திரளும் பொதுமக்கள்!

ஜெர்மனியில் விலங்கு பூங்கா ஒன்றில் பிறந்த பனிக்கரடிக் குட்டி, முதல்முறையாக வெளியே காலடி எடுத்து வைத்துப் பார்ப்போரைப் பரவசப்படுத்தியுள்ளது.
குட்டி, அது தங்கியிருக்கும் கூண்டுக்கு வெளியே முதல்முறையாக நடக்க முயன்றது. ஆனால், அது தடுமாறி நடந்த விதம் அங்கிருந்தோரை எளிதில் கவர்ந்தது.
டிசம்பர் முதல் தேதி, ஜெர்மன் தலைநகர் பெர்லினில் உள்ள டியர்பார்க் (Tierpark) விலங்குத் தோட்டத்தில் பிறந்த அந்தக் குட்டிக்கு, இன்னும் பெயரிடப்படவில்லை.
அது டொன்யா (Tonja) என்ற 9 வயதுப் பெண் கரடிக்கும் வொலொட்யா (Wolodja) என்ற ஆண் கரடிக்கும் பிறந்த
குட்டியைக் காண பொதுமக்கள் படையெடுத்து வருகிறார்கள்.
தாயின் வளர்ப்பில் ஈராண்டுகள் கழித்தப் பின்னர் வேறொரு விலங்குத் தோட்டத்திற்குக் குட்டி அனுப்பப்படும் என்று பூங்கா பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments