ஊழலில் திணறும் யாழ் போதனா வைத்தியசாலை

யாழ்.போதனா வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை பிாிவுக்குள்ளிருந்து பெருமளவு காலாவதியான மருந்துகள் மற்றும் உாிய பரமாமாிப்பின்றி வைக்கப்பட்டிருந்த மருந் துகளை கணக்காய்வு குழு மீட்டுள்ளது. இந்த மருந்துகள் மிக பெறுமதியானவை என கூறப்படுகின்றது.

யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் அண்மையில் பத்தரமுல்ல பகுதியிலிருந்து வந் த கணக்காய்வு குழு அதிரடியாக நுழைந்து ஆய்வுகளை மேற்கொண்டிருந்தது. இதன் போதே மேற்படி காலாவதியான மருந்து பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. கணக்காய்வு க்குழு ஜனாதிபதியின் பணிப்பின் பெயாில்,

மேற்படி கணக்காய்வு குழு யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்திருக்கின்ற து. கணக்காய்வு குழு குறித்து யாழ்.போதனா வைத்தியசாலை நிா்வாகம் அதிகம் அக் கறையற்றிருந்த நிலையில், கணக்காய்வு குழு சத்திரசிகிச்சை பிாிவுக்குள் அதிரடியா க நுழைந்து ஆய்வு செய்துள்ளது.

இதன்போது அங்கு காலாவதியான மருந்துகள், உாிய முறையில் பாதுகாக்கப்படாத பெறுமதியான மருந்துப் பொருட்கள் இருப்பதை கண்காய்வு குழு கண்டுபிடித்துள்ள து. மேலும் சத்திரசிகிச்சை கூடத்திலிருந்து தனியாா் வைத்திய சாலைகளுக்கு மருந் து எடுத்து செல்லப்படுவது குறித்தும் குழு ஆராய்ந்துள்ளது.

எலும்பு முறிவு சிகிச்சை நிலையத்தின் பெயாில் மோசடி..

அத்துடன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை என்பு முறிவு சிகிச்சை நிலையம் தனியான கட்டடத்தில் இயங்கியதாகவும் அதற்கு வழிச்சீராக்கிகள் பொருத்தப்பட்ட தாகவும் கணக்குகளில் உள்ளகப்பட்ட போதும் அவ்வாறான ஒரு சிகிச்சை நிலையம் இல்லை என கணக்காய்வுப் பிரிவினர் கண்டறிந்துள்ளனர்.

எனினும் அந்த சிகிச்சை நிலையம் அகற்றப்பட்டே விபத்து அவசர சிகிச்சைப் பிரிவு கட்டடப்பட்டதாக அதற்குப் பொறுப்பான பிரிவினர் கணக்காய்வுக் குழுவுக்கு விளக்க மளித்துள்ளனர். அதனால் அதுதொடர்பில் அந்தக் குழிவினரால் ஆராயப்படுகிறது எ ன்றும் அறியமுடிகிறது.

No comments