மஸ்தான் எம்.பியின் வாகனம் மோதி மூவர் படுகாயம்

வவுனியா மாவட்ட நாடாளுமனற உறுப்பினா் காதா் மஸ்த்தான் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானதில் தந்தை, தாய், பிள்ளை என 3 போ் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனா்.

இன்று காலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

அநுராதபுரத்தில் இருந்து வவுனியா நோக்கி வந்துகொண்டிருந்த பாராளுமன்ற உறு ப்பினர் காதர் மஸ்தானின் வாகனம் முன்னால் சென்று கொண்டிருந்த மோட்டார் சை க்கிளுடன் மோதியுள்ளது.

பூனேவ, மககும்புகொல்லேவ பிரதேசத்தில் இடம்பெற்ற குறித்த விபத்தில் ஒரே குடு ம்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் பிள்ளை ஆகியோர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவத்தில் காயமடைந்த மூவரும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதி க்கப்பட்டுள்ளனர்.  விபத்தின் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் வேறொரு வாகனத் தில் அழைத்துச் செல்லப்பட்டதாக பிரதேசவாசிகள் கூறுகின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மதவாச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.

No comments