ஹெரோயின் போதை நுகர முயன்ற மூன்று மாணவர்கள் யாழில் கைது

ஹெரோயின் போதைப் பொருளை நுகர முயன்ற நிலையில் பாடசாலை மாணவா்கள் மூவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்துள்ளனா்.

அவர்கள் மூவரையும் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்திய நிலையில் விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிமன்றம் உத்தரவிட்டது.

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் வைத்தே மாணவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மூவரும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்டை எழுதிவிட்டு பெறுபேற்றுக்காக காத்திருப்பவர்கள் என மன்றில் தெரிவிக்கப்பட்டது.

No comments