ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிதான் - சு.க விடாப்பிடி

“ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தனித்துவத்தை இழந்துவிட்டு, கூட்டணி அமைப்பதற்கு நாம் தயாரில்லை. மைத்திரிபால சிறிசேனவே எமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராவார்.” – என்று சு.கவின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர திட்டவட்டமாக அறிவித்தார்.


கண்டியில் இன்று (16) நடைபெற்ற அரசியல் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு அறிவிப்பு விடுத்தார்.இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது,

” புதிய அரசியல் கூட்டணி அமைப்பது குறித்து சுதந்திரக்கட்சிக்கும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குமிடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுவருகின்றது. இரு தரப்புகளிலிருந்தும் கொள்கை விளக்க அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

எனினும், ஜனாதிபதி வேட்பாளரை தமது கட்சி தெரிவுசெய்துவிட்டதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் சிலர் கருத்து வெளியிட்டுவருகின்றனர். எனவே, சுதந்திரக்கட்சியின் தனித்துவத்தை இழப்பதற்கு நாம் தயாரில்லை. சுதந்திரக்கட்சியின் ஆசிர்வாதமின்றி வெற்றி இலக்கை அடையமுடியாது.

எமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர், மைத்திரிபால சிறிசேன என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம். பொதுஜன பெரமுனவுடன் இணக்கப்பாடு எட்டப்படும்வரை தனித்துவமாகவே இயங்குவோம்.” என்றார்.

No comments