தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத் தலைவராக முரளிதரன் தெரிவு

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் தலைவராக யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கை சேர்ந்த இரத்தின சிங்கம் முரளீதரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நேற்று தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்க மகா சபையின் பொதுக்  கூட்டம் நீர்கொழும்பு தலமை அலுவலகத்தில்  காலை 9:30 மணிக்கு அதன் தேசிய அமைப்பாளர் கேமன் குமார தலமையில் ஆரம்பமானது.

அதன்போது இடம்பெற்ற புதிய நிர்வாக தெரிவிலேயே இரத்தினசிங்கம் முரளீதரன் மகா சபையில் தலைவராக ஏக மனதாக தெரிவு செய்யப்பட்டார்.

நிகழ்வில் வரவேற்பு உரையை பெண்கள் திட்ட இணைப்பாளர் திருமதி லவீனா நிகழ்த்தியதை தொடர்ந்து  தலைமை உரையை தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்க தேசிய அமைப்பாளர் கேமன் குமார நிகழ்த்தினார்.

அதனை தொடர்ந்து தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் கடந்த வருட பொது கூட்ட அறிக்கை வாசிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பழைய நிர்வாகம் கலைக்கப்பட்டு புதிய நிர்வாகம் தெரிவு இடம்பெற்றது.

புதிய நிர்வாகத் தெரிவின்போது தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் புதிய. மகா சபை தலைவராக யாழ் மாவட்டத்தை சேர்ந்த இ.முரளிதரன் ஏக மனதாக தெரிவு செய்யப்பட்டார். செயலாளராக திருமதி லலானியும் இணை செயலாளராக M.H.முபாரக் அவர்களும் பொருளாளராக திருமதி கீர்த்தீனா ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.

அதனை தொடர்ந்து தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் பணியாற்றும் 16 மாவட்டங்களை சேர்ந்தவர்களிலிருந்து ஐந்து பேர் நிருவாக சபை பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டனர்.இதில் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் பணியாற்றும் 16 மாவட்டங்களை சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

No comments