வேல்முருகன் திடீர் முடிவு! பாமகவினர் கலக்கம்!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் நேற்று திடீரென சந்தித்தார். தேர்தலில் திமுக கூட்டணிக்கு தமிழக வாழ்வுரிமைக்கட்சி ஆதரவளிக்கும் என்றும் வேல்முருகன் அறிவித்துள்ளார்.

உடல் நலக் குறைவால் சிகிச்சை பெற்று திரும்பிய வேல்முருகன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த போது, தற்போது நடைபெற உள்ள தேர்தலில் யாருடனும் கூட்டணிக்காக அவசரப்படவில்லை என்று கூறியிருந்தார். மேலும் அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள பாஜக, பாமக, தேமுதிக கட்சிகளை கடுமையாக தாக்கி பேசியிருந்தார்.
இந்நிலையில் நேற்று மாலை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை திடீரென சந்தித்த வேல்முருகன் திமுக தலைமையிலான கூட்டணிக்கு தமிழக வாழ்வுரிமைக்கட்சி ஆதரவளிக்கும் என்று தெரிவித்தார்.
இந்நிகழ்வு பாமக தரப்பினருக்கு நெருக்கடி எற்றபடுத்தியுள்ளதாகவும், அவர்களின் வெற்றிவாய்பை வீழ்நதவே வேல்முருகன் இவ்வாறு திடீர் முடிவெடுதுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்!

No comments