மர்மப் பொதி! மூடப்பட்டது வானூர்த்தி நிலையம்!

நியூசிலாந்து நாட்டின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள டியூன்டின் வானூர்தி நிலையத்தில் கிடந்த மர்மப் பொதியினால் வானூர்த்தி நிலையமே மூடப்பட்டுள்ளது.

இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணியளவில் குறித்த வானூர்த்தி நிலையதின் பயணிகள் வெளியேறும் பகுதியில் மர்மப் பொதி கிடப்பதாகக் சுங்க அதிகாரிகள், மற்றும் வானூர்த்திப் பாதுக்காப்புப் பிரிவினருக்கும் கிடைத்த தகவலையடுத்து வானூர்தி நிலையத்தின் அனைத்து கதவுகளும் மூடப்பட்டது. அத்துடன் அருகிலுள்ள 86 தேசிய நெடுஞ்சாலையும் மூடப்பட்டது.

வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினரும், காவல்துறையினரும் மோப்ப நாய்கள் சகிதம் வரவழைக்கப்பட்டு வானூர்த்தி நிலையத்தில் கடுமையான சோதனை நடத்தப்பட்டது. எனினும் பாதிப்பு ஏற்படக்கூடிய எவையும் கண்டு பிடிக்கப்படவில்லை.

இத்தகவலால் பீதியடைந்து பயணிகள் அனைவரும் பத்திரமாக அப்பகுதியிலிருந்து அகற்றப்பட்டனர்.

வானூர்த்தி நிலையத்தில் தரையிரறங்க வந்த அனைத்து வானூர்திகளும் அருகில் உள்ள வானூர்த்தி நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டன. வானூர்தி சேவையை தவறவிட்டவர்களுக்கு நாளை மாற்று ஏற்பாடு செய்து தரப்படும் என வானூர்தி நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது.
 
No comments