இந்தியப் போர் விமானத்தை வீழ்த்த அமெரிக்காவின் தயாரிப்பை பயன்படுத்திய பாகிஸ்தான்!

இந்தியப் போர் விமானத்தை வீழ்த்த அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட F-16 ரக ஜெட் விமானத்தைப் பாகிஸ்தான் பயன்படுத்தியதா என்பது பற்றி வாஷிங்டன் விசாரித்து வருவதாக இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகம் கூறியுள்ளது.
அந்த சந்தேகம் நிரூபணமானால், F-16 ரக ஜெட் விமானங்களின் பயன்பாட்டு குறித்து, அமெரிக்காவுடன் செய்து கொண்ட உடன்பாட்டை பாகிஸ்தான் மீறியிருப்பதாகக் கருதப்படும்.
காஷ்மீரின் எல்லையைத் தாண்டி வந்த இந்தியப் போர் விமானத்தை
வீழ்த்த F-16 ரக ஜெட் விமானங்களைப் பயன்படுத்தவில்லை என்று பாகிஸ்தான் கூறிவருகிறது.

No comments