தொடங்கியது தமிழரசின் அல்லக்கை அரசியல்!


தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட தலைவர் குகதாசன் இலங்கைப்பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண அபிவிருத்தி செயலணியின் இணைபாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழரசு கட்சியின் தலைவர் சம்பந்தன் சிபாரிசில் இந்த நியமனம் வழங்கப்பட்டு இருக்கிறது.

இவருக்கு திருகோணமலை மாவட்ட செயலகத்தில் அலுவலகம் , வாகன வசதிகள் உட்பட்ட சலுகைகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது . அனால் இவர் இலங்கை நிர்வாக சேவையை சார்ந்தவர் அல்ல .இவருக்கு கல்வி நிர்வாக பொருளாதார திட்டமிடல் என எதிலும் அனுபவம் இல்லை . இரா.சம்பந்தரின் ஆதரவாளர் என்பது மட்டுமே இவரின் தகுதியென விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

நீண்டகாலம் கனடாவில் இருந்த அவர் கடந்த ஆண்டு தொடக்கம் திருகோணமலையில் வந்து தங்கி இருக்கிறார்.அரச நிருவாக சேவையில் அனுபவம் உள்ள பலரும் உள்ள நிலையில் தகுதி அற்ற ஒருவரை அரசாங்கத்தில் பதவி பெற்று கொடுத்து சம்பந்தன் கோஸ்டி சாதிக்க நினைப்பது என்ன ? தகுதியற்ற நியமனங்கள் தான் ஊழலின் முதல் வித்து என நிர்வாக சேவை அதிகாரிகள் தரப்பில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

சம்பந்தனுக்கு விசேட அமைச்சரவை பத்திரத்தின் கீழ் எதிர்க்கட்சி தலைவருக்கான வீடு , வாகனங்கள் அதற்குரிய செலவினங்கள் அனைத்தையும் அரசாங்கம் பொறுப்பேற்று இருக்கிறது .மறுபுறம் சுமந்திரன் அமைச்சரவை அமைச்சர்கள் சகிதம் பயணம் செய்ய அமைச்சர்களுக்குரிய உள்நாட்டு விமான வசதிகள் , ஹெலிவசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருக்கிறதென விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

திருகோணமையில் இரா.சம்பந்தனை சந்தித்திருந்த வேலையற்ற பட்டதாரிகள் தமக்கான அரச நியமனங்களினை கோரிய போது அவ்வாறு சலுகை பெறுவது அரசியல் தீர்வு முயற்சிகளை பாதிக்கும் என விளக்கமளிக்கப்பட்டிருந்தது தெரிந்ததே.

இதேவேளை வடக்கிற்கான இணைப்பாளராக நோர்வேயிலிருந்து வருகை தந்திருந்த செல்வின் இரேனியஸ் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments