தம்பியவை போராடுவதும் தமிழரசு போராடுவதும் ஒன்றேதானாம்!


யாழ்.பல்கலைக் கழக மாணவர்களால் மிகப் பெரும் ஆர்ப்பாட்டம். ஐ.நா அமர்வு காலத்தில் நேற்று நடந்திருந்த போது வருகை தந்த மாவை.சேனாதிராசா பி;ன்னால் துரத்தப்பட்ட பரிதாபம் நடந்திருந்தது.
வழமையாக இவ்வாறான போராட்டங்களில் வலிந்து கலந்து கொள்ளும் மாவை மற்றும் சிறீதரன் போன்றவர்கள் ஊடகங்களிடையே தாமே வெட்டிவீழ்த்துவது போல பேட்டிகளை வழங்கிவிட்டு தமது சொகுசு காரில் சென்றுவிடுவர்.இதனை கருத்தில் கொண்டு நேற்றைய பேரணியில் அரசியல்வாதிகளிடம் பேட்டிகளை பேரணி களத்தில் எடுக்கவேண்டாமென மாணவ பிரதிநிதிகள் கோரியிருந்தனர்.

அத்துடன் மாவை உள்ளிட்டவர்களை மக்களோடு மக்களாக பங்கெடுக்க கோரியுமிருந்தனர்.இதனால் பின்வரிசை சென்ற மாவை பின்னர் சத்தமின்றி வெளியேறிவிட்டார்.

வழமைபோலவே இதனையடுத்து அவருக்கு முட்டுக்கொடுக்க தமிழரசு அல்லக்கைகள் முற்பட்டுள்ளன.

பிரித்தானியா , கனடா , ஜேர்மனி ஆகியன இணைந்து புதிய தீர்மானம் வரவுள்ள நிலையில் அது கால அவகாசமாக அமையக்கூடாது என்ற தேவையினை வலியுறுத்துகின்றனர். 

ஐ.நா அமர்வு காலத்தில் பிரித்தானியா , கனடா , ஜேர்மனி ஆகியன இணைந்து புதிய தீர்மானம் வரவுள்ள நிலையில் அது கால அவகாசமாக அமையக்கூடாது என்ற தேவையினை வலியுறுத்துகின்றனர் இதேவேளை சர்வதேச விசாரணையே வேண்டும். என்றே நாமும் கோருகின்றோம் .

அது இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து குறுகிய காலத்தில் நிறைவேற்றும் வகையில் அமைய வேண்டும் என அனைவரும் கோருகின்றனர். இதனை நாமும் நாடாளுமன்றில் சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய விசாரணையே தீர்வைத் தரும் என கோரியுள்ளோம்.

இந்த நாட்டு விசாரணையை நம்பிக்கையாக கொண்டிருக்க முடியாது. அதனாலேயே சர்வதேசத்தை நாம் கோருகின்றோம். இலங்கை அரசு காலத்தை இழுத்தடிக்க சந்தர்ப்பத்தை வழங்காது ஐ.நா நிபுணர்குழு அடங்கிய விசாரணையை நிறைவேற்ற வேண்டும். என கோருகின்றோம். அதற்காக நாமும் சர்வதேச இராஜதந்திரிகளை சந்திக்கின்றோம் . இங்கே இன்று இனத்தின் விடிவிற்காக போராடும் இந்த மாணவர்களிற்கும் நன்றி கூற வேண்டும். இவ்வாறே ஜனநாயக அடிப்படையில் போராட அனைவரும் முன்வர வேண்டுமென மாவையின் பிரசங்கத்தை கொண்டு செல்ல தொடங்கியுள்ளன தமிழரசு ஆதரவு தரப்புக்கள்.

No comments