காணி விற்பனையில் தெற்கில் போட்டி!


இலங்கை இராணுவத் தலைமையக காணியை வெளிநாட்டுக்கு விற்ற தேசப்பற்றாளர்கள் என தம்மை இனங்காட்டிக்கொள்பவர்கள், தற்போதைய அரசாங்கமே அரச காணிகளை விற்பதாக போலி பிரசாரங்களை முன்னெடுக்கின்றனர் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.எனினும் தற்போதைய அரசாங்கம் அவ்வாறு அரச காணிகள் எதனையும் விற்கவில்லையென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னைய மகிந்த அரசின் காலத்தில் கொழும்பு காலி வீதியிலிருந்த பாதுகாப்பு அமைச்சின் பெருமளவு காணிகள் சீன அரசிற்கு விற்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மகிந்த தரப்பு ரணில் தரப்பின் மீது வெளிநாடுகளிற்கு காணிகளை விற்பதாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளமை தெரிந்ததே.

No comments