இனப்படுகொலைக்கு நீதி கோரலாம்!


ஜெனீவாவில் இடம்பெறுகின்ற மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் முன்வைக்க வேண்டும் என்று கருதும் தமது கோரிக்கைகளை பொதுமக்கள் அல்லது பொது அமைப்புகள் நாளைய தினம் நடைபெறவுள்ள ஆளுநரின் பொதுமக்கள் சந்திப்பின்போது எழுத்து மூலமாக நேரடியாக கையளிக்கமுடியுமென ஆளுநர் அலுவலகம் மீண்டும் அறிவித்துள்ளது.

அத்துடன் பொதுமக்களின் நலன் கருதி குறித்த கோரிக்கைகளை சமர்ப்பிப்பதற்காக தனியான பிரிவு அமைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ஆளுநரின் பொதுமக்கள் தினம் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில் கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சர் அமைச்சு செயலகத்தில் நாளை (13) நடைபெறவுள்ளது.

வடமாகாண சபை அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்களின் பங்குபற்றுதலுடன் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.

No comments