பாலைத்தீவு புனித அந்தோனியாருக்கு 21ம் திகதி உற்சவம்!


கிளிநொச்சி - பூநகரி, பாலைத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு, பாதுகாப்புக் கடமைக்கென, இலங்கைப்பொலிஸார் ஈடுபடுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலைத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த உற்சவம், மார்ச் 21ஆம் திகதியன்று ஆரம்பமாகவுள்ளது.

அதற்கான முன்னேற்பாடுகள், பூநகரி பிரதேச செயலாளர், வலைப்பாடு பங்குத்தந்தை, பாலைத்தீவு முப்பர் ஆகியோருடைய தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையிலேயே, பாதுகாப்புக் கடமைகளுக்காக, இம்முறை 30 பொலிஸார் ஈடுபடுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மற்றும் வன்னி பகுதிகளிலிருந்து யாத்திரீகர்கள் பங்கெடுக்கும் ஆலய நிகழ்வு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

No comments