தமிழரசை காப்பாற்றிய மொஹமட் ஓய்வு பெற்றார்?


நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் விருப்பு வாக்குகளில் குழறுபடி செய்து சுமந்திரன் மற்றும் மாவை சேனாதிராசா,சரவணபவனை வெற்றி கொள்ளவைத்தவரென அடையாளப்படுத்தப்பட்ட  ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் எம்.எம்.மொஹமட் ஒய்வுப்பெற்றுள்ளார்.அவரது வெற்றிடத்துக்கு, புதிய பணிப்பாளர் நாயகமாக  சமன் சிறீரத்நாயக்க தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்னர் மேலதிக தேர்தல் ஆணையாளராக பணியாற்றியிருந்தார்.

சமன் சிறீ ரத்நாயக்க, தேர்தல் ஆணைக்குழுவின் 4 ஆவது பணிப்பாளர் நாயகமாக விளங்குவதுடன், அவர் நேற்று (11) தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

இதனிடையே நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் காலத்தில் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த எம்.எம்.மொஹமட் விருப்பு வாக்குகளில் மோசடி செய்தமையினை சுரேஸ்பிறேமச்சந்திரன்,
அருந்தவபாலன் உள்ளிட்டோர் அம்பலப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments