ஹீத்ரோ, சிட்டி விமான நிலையம், வோட்டர்லூவில் வெடிகுண்டுப் பொதிகள் மீட்பு!

பிரித்தானியாவில் ஹீத்ரோ விமான நிலையம், இலண்டன் சிட்டி விமான நிலையம் மற்றும் வோட்டர்லூ நிலையத்திலும் மேம்படுத்தப்பட்ட சிறிய வெடிபொருள் சாதன தபால் பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மூன்று தபால் பொதிகளிலும் சிறிய மேம்படுத்தப்பட்ட வெடிபொருள் சாதனங்கள் இருந்துள்ளதாக மெற்றோ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

9.55 மணிக்கு ஹீத்ரோ விமான நிலைய ஊழியர்களின் வளாகம் மூடப்பட்டு, பொதியை ஊழியர்கள் திறந்தபோது தபால் பொதி எரிந்துள்ளது.

ஹீத்ரோ மற்றும் வாட்டர்லூவுக்கு அனுப்பட்ட தபால் பொதிகளில் அயர்லாந்துக் குடியரசின் தபால் சேவைக்கான காதல் மற்றும் திருமண வாழ்த்தைக் குறிக்கும் தபால் தலைகள் (முத்திரைகள்) என்பன ஏ4 அளவிலான வெள்ளை நிற கடித உறைக்குள் மஞ்சள் நிற ஜெப்ரி பைக்குள் வைக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளன.

வோட்டர்லூவுக்கு அனுப்பட்ட பொதியில் கடித்தை அனுப்பியவர் பெயர் பஸ் ஈயரன், டப்ளின் (Eireann, Dublin) என இருந்துள்ளமை கண்டுபிடிக்ப்பட்டுள்ளது.

இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

No comments