பதுங்கினர் மாவையும்,செல்வமும்!


ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு காலஅவகாசம் வழங்கக்கூடாது, அதை எதிர்ப்போம் என மாவை சேனாதிராசா தெரிவித்துள்ள நிலையில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நாளை அவசரமாக கூடவுள்ளது.

கடந்த 2ம் திகதி ஜெனீவா அமர்வு தொடர்பில் யாழில் ஒரு கூட்டத்தை ரெலோ கட்சி கூட்டியிருந்த,ஐ.நாவில் இலங்கைக்கு காலஅவகாசம் வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்தியே அந்த கலந்துரையாடல் நடந்தது. இதில் மாவை சேனாதிராசா,புளொட் தலைவர் சித்தார்த்தனும் கலந்து கொண்டார்.

மாவை சேனாதிராசா இனியும் இலங்கைக்கு காலஅவகாசம் வழங்கக்கூடாது, அதை நாம் ஏற்கமாட்டோம் என தெரிவித்திருந்தார். இது சுமந்திரன் ,சம்பந்தன் தரப்பிற்கு தலையிடியாகியுள்ளது.

இந்த நிலையில் நாளை மாலை, கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுவை கூட்ட சம்மந்தன் தீர்மானித்துள்ளார். இலங்கைக்கு காலஅவகாசம் வழங்கக்கூடாது என ரெலோ செயலாளர் தலைமையிலான ரெலோ அணி மேற்கொள்ளும் முயற்சியில், மாவை, சித்தார்த்தன் முதலான கூட்டமைப்பின் தலைவர்கள் கையொப்பமிட சம்மதித்துள்ளனர். ஆனால், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் கோடீஸ்வரன் ஆகியோர் முதலில் கையொப்பமிட்டாலே நாம் கையொப்பமிடுவோம் என எல்லா கட்சிகளின் தலைவர்களும் கூறியுள்ளமை தெரிந்ததே.

No comments