தொங்கிய நிலையில் சடலம்! விசாரணையில் காவல் துறையினர்;


வாழைச்சேனை ஆலங்குளம்  கிராமத்தில் மரத்தில் தொங்கவிடப்பட்ட நிலையில் ஆணொருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

அக் கிராமத்தில் வசித்து வந்த 3 பிள்ளைகளின் தந்தையான 46 வயதுடைய சின்னையா சுப்பிரமணியம் என்பவரின் சடலமே என்று தெரியவந்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்

கடந்த ஞாயிற்றுக்கிழை 17 அவர் சில நபர்களால் தாக்கப்பட்ட நிலையில் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்து சிகிச்சை பெற்ற பின்னர் நேற்று திங்கட்கிழமை 18 பகல் வீடு திரும்பியிருந்ததாகவும், வீடு திரும்பியிருந்தவர் தனது வீட்டின் பின் வளவிலுள்ள அத்தி மரத்தில் தொங்கவிடப்பட்ட நிலையில் காயங்களுடன் சடலமாகக் காணப்பட்டதாகவும் மனைவி தெரிவித்துள்ளார். சம்பவ இடத்துக்கு சென்ற காவல் அதிகாரிகள் மேலதிக  விசாரணைகளைத் மேற்தொடங்கியுள்ளனர்.

No comments