தனிநாடுதான் தீர்வு! ஜெனிவாவில் கருணாஸ்!

ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு சர்வதேச  விசாரணையும் பொதுவாக்கெடுப்பின் மூலமான தனித் தமிழீழமே தமிழ் மக்களுக்கான  தீர்வாக அமையும் என தென்னிந்திய திரைபட நடிகரும் தமிழக சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் தெரிவித்துள்ளார். ஜெனிவா மனித உரிமை பேரவையில் நேற்று நடைபெற்ற இலங்கை தொடர்பான  விசேட உபகுழு கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 
 இலங்கைக்கு மீண்டும் கால நீடிப்பு வழங்கப்படக் கூடாது. போரினால் பாதிக்கப்பட்டோரின் துயரம் குறித்தும், ஏனைய சர்வதேச மனித உரிமை, மனித நேயச் சிக்கல்கள் குறித்தும் கண்காணித்து ஆறு மாதத்துக்கொரு முறை அறிக்கையளிக்கும் பொறுப்பில் இலங்கைக்கான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் ஒருவர் அமர்த்தப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

No comments