உறவுகள் எங்கே! வெகுண்டெழுந்தது கிழக்கு!

வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பில் சரியான பதிலை அரசாங்கம் வழங்குவதற்கு சர்வதேசம் அழுத்தங்களை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கடையடைப்பும் கவனயீர்ப்பு பேரணியும் போராட்டமும் இன்று 19.03.2019 காலை மட்டக்களப்பில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் குடும்பசங்கத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட இந்த கவன ஈர்ப்பு பேரணியில் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளருமான சீ.வீ.விக்னேஸ்வரனும் இலங்கை தமிழரசுக் கட்சி செயலாளருமான துரைராஜசிங்கமும் மட்டக்களப்பு தமிழ் இளைஞர்கள் சமூக அமைப்பும் மற்றும்இலங்கை தமிழரசுக் கட்சி வாலிபர் முன்னணி ஏனைய அமைப்புகளும் இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டபோது வடகிழக்கில் உள்ள சகல பிரதேசங்களிலும் இருந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்,மற்றும் பொதுமக்களும் கலந்துகொண்டனர். மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இருந்து பல ஆயிரக்கணக்கான மக்கள்,இளைஞர்கள் பல்வேறு கோரிக்கைகளை தாங்கியதாக பேரணி காந்தி பூங்கா வரையில் சென்றது. காந்தி பூங்காவினை பேரணி சென்றடைந்ததும் அங்கு கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

No comments