நிலவில் விண்கலம் எடுத்த தற்படம்(selfie)!பூமி தெரிந்த அதிசயம்!

நிலவில் ஆய்வுகள் மேற்கொள்வதற்காக அனுப்பப்பட்டுள்ள இஸ்ரேலின் பெரஷீத்(Beresheet)ஆய்வுக் கலம், தன்னைத் தானே எடுத்துக் கொண்ட படத்தை 37,600 தொலைவிலுள்ள இஸ்ரேலின் யேஹுத் (Yehud)ஆய்வு மையத்துக்கு அனுப்பியுள்ளது.
பெரஷீத் ஆய்வுக் கலனின் ஒரு பகுதி தெரியும் அந்த கைப்படத்தின் பின்னணியில், பூமி தெரிவது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

நிலவில் ஆய்வு செய்வதற்காக இஸ்ரேலில் உருவாக்கப்பட்ட "பெரஷீத்' என்ற விண்கலம் அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்திலுள்ள கேப் கனாவெரல் ஏவுதளத்திலிருந்து  கடந்த மாதம் 22-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments