அலரி மாளிகையில் அமெரிக்க பணியகம்

அமெரிக்காவின் மிலேனியம் சவால் அமைப்பின் பணியகம் ஒன்று அலரி மாளிகையில் அமைக்கப்பட்டுள்ளதாக, கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நடந்த குழுநிலை விவாதத்தில்  உரையாற்றிய விமல் வீரவன்ச, சிறிலங்கா பிரதமரின் அதிகாரபூர்வ வதிவிடமான அலரி மாளிகையில் அமெரிக்கா, மிலேனியம் சவால் அமைப்பின் செயலகத்தை அமைத்துள்ளது என்றும், கொழும்பு துறைமுகத்தில் இருந்து திருகோணமலை வரை, 200 கி.மீ தூரத்துக்கு சிறப்பு பொருளாதார வலயம் அமைக்கப்பட்டு அங்கு அமெரிக்காவின் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும், குற்றம் சாட்டியுள்ளார்.

No comments