இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துவதுதான் ஒரே வழி - விக்கி

“இலங்கை தொடர்பான உண்மை நிலையை ஐ.நா. செயலாளர் நாயகம் ஐ.நா. பாதுகாப்புச் சபைக்கு எடுத்துக்காட்டி இது தொடர்பான நடவடிக்கைகளை எடுப்பதாக இருந்தால் இலங்கை விவகாரத்தைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு அனுப்ப வேண்டும் என்பதே எமது கோரிக்கை.”

– இவ்வாறு அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்தார் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வி.விக்னேஸ்வரன்.

தமிழர்களின் பிரச்சினைகளை இழுத்தடிப்புச் செய்து தூர்ந்துபோகச் செய்வதற்கான நடவடிக்கைகளே தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகையைச் சந்தித்துக் கலந்துரையாடினார். இதனையடுத்து இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

No comments