மட்டக்களப்பு பேரணியில் கூட்டமைப்பை விரட்டிய மக்கள்


மட்டக்களப்பில் இடம் பெற்ற போராட்டத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களை பேச விடாது மக்கள் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

வடக்கு கிழக்கு மகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் ஏற்பாட்டில்இன்று (19) செவ்வாய்கிழமை மட்டக்களப்பில் மக்கள் எழுச்சிப் பேரணிநடைபெற்றது.

குறித்த பேரணியில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சீனித்தம்பி யோகேஸ்வரன், சிறிநேசன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன், முன்னாள் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரைராசசிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்த நிலையில் அவர்களை விலகிச் செல்லுமாறு  மக்கள் கோசங்கள் எழுப்பினர்.

அத்துடன் ஊடகவியலாளர்களை மேற்குறித்த நபர்கள் மக்கள் பிரதிநிதிகள் அல்ல, அவர்களை போராட்ட இடத்தில் வைத்து நேர்காணல் செய்ய வேண்டாம் என கோரிநின்றனர்.
இதனையடுத்து மேற்படி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவ்விடத்தில் இருந்து விலகிச் சென்றனர்.

No comments