இலங்கைக்கு கடும் நெருக்கடி – உலக வங்கி எச்சரிக்கை

2019ஆம் ஆண்டு, இலங்கையின் பொருளாதார வளர்ச்சி கடந்த ஆண்டு கணிக்கப்பட்டதை விட, சற்று அதிகமாக இருக்கும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கை அபிவிருத்தி தொடர்பாக உலக வங்கி வெளியிட்டுள்ள பிந்திய அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 3.1 வீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டது. எனினும், இந்த ஆண்டு வளர்ச்சி 3.5 வீதமாக அதிகரிக்கும்.

எனினும், அதிகளவு கடன் மீளளிப்பு, பூகோள நெருக்கடிகள், தேர்தல்களால் ஏற்படக் கூடிய அரசியல் உறுதியற்ற நிலை போன்றவற்றினால், இலங்கை கடுமுமையான நெருக்கடிகளை இந்த ஆண்டு எதிர்கொள்ள நேரிடும் என்றும் அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

No comments