ஐதேக எம்.பிக்கள் 17 பேர் இரகசிய சந்திப்பு - குழப்பத்தில் தலைமை


ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை எம்.பிக்கள் 17 பேர் கடந்தசில நாட்களாக தொடர்ச்சியாக இரகசிய சந்திப்புகளை நடத்திவருவதால்,  கட்சியின் உயர்பீடம் கடும் அதிருப்தியில் இருப்பதாக அறியமுடிகின்றது.

நாடாளுமன்றத்தில் வரவு – செலவுத்திட்டம் முன்வைக்கப்படவுள்ள நிலையில், பின்னிலை எம்.பிக்களின் செயற்பாடானது பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் கிளப்பிவிட்டுள்ளது.

குறித்த எம்.பிக்களின் பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்காக குழு அமைக்கப்பட்டுள்ள போதிலும், எதற்காக இவர்கள் இரகசிய சந்திப்புகளை நடத்த வேண்டும், இதன் பின்புலம் என்ன? இவர்களை இயக்குவது யார் என்றெல்லாம் மூத்த உறுப்பினர்கள் சிலர் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

இதற்கான காரணங்களை பின்னிலை எம்.பிக்கள் வெளிப்படையாக அறிவிக்காதபோதிலும்,

ஐக்கிய தேசியக்கட்சியிலிருந்தே  ஜனாதிபதி வேட்பாளர் தெரிவுசெய்யப்பட வேண்டும். எமது கட்சி விவகாரங்களில் பங்காளிக்கட்சிகள் தலையிடக்கூடாது.

தேசிய அரசாங்கம் அவசியமில்லை என்பது உட்பட  மேலும் பல விடயங்கள் தொடர்பிலேயே நாம் இரகசிய கலந்துரையாடல்களை நடத்திவருவதாக தமக்கு நெருக்கமானவர்களிடம் கூறியுள்ளனர்.

No comments