புறப்பட்டார் சரவணபவன் ஜெனீவாவிற்கு?

ஊடகப்படுகொலைகளிற்கு நீதி கேட்டு நீண்ட காலத்தின் பின்னர் சுவிஸ் செல்லவுள்ளார் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன்.

இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமை, வடக்கின் நிலைமைகள் தொடர்பாக ஈ.சரவணபவனை, சுவிற்சர்லாந்து தூதுவர் ஹான்ஸ்பீட்டர் மொக், கனடாத் தூதுவர் டேவிட் மக்கினன் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இத்திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார்.இந்தச் சந்திப்பு நேற்றுக் கொழும்பில் நடைபெற்றுள்ளது. 

தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைப்பதற்கு சர்வதேச சமூகம் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்த நாடாளுமன்ற உறுப்பினர், அதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்க வேண்டும் என்று தூதுவர்களிடம் கேட்டுக் கொண்டார். தமிழ் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கான நீதி இதுவரை கிடைக்கவில்லை. இந்த ஆண்டு ஜெனிவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் பேரவை அமர்வில் இது தொடர்பாக முறையிடவுள்ளேன் என்றும் தூதுவர்களிடம் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் ஊடகப்படுகொலைகள் என்ற பேரில் தனது பத்திரிகை நிறுவனப்பணியாளர்கள் தொடர்பில் மட்டுமே அவர் பேசிவருவது குறிப்பிடத்தக்கது.

No comments