நாளை வெளிவருமா மன்னார் புதைகுழி அறிக்கை?


மன்னார் மனித புதைகுழியின் காபன் பரிசோதனை அறிக்கை நாளை வியாழக்கிழமை கிடைக்கப்பெறலாமென தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.

புதைகுழியின் அகழ்வு பணிகள் இன்று புதன் கிழமையும் அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தலைமையில் இடம் பெற்றிருந்தது. தொடர்ச்சியாக இடம் பெற்று வந்த அகழ்வு பணிகள் இன்று புதன் கிழமை 144 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதனிடையே மன்னார் மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் இன்று (13) புதன் கிழமை 144 அவது நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.தற்போது வரை 316 மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 307 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளது.மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளில் 26 எலும்புக்கூடுகள் சிறுவர்களுடையது.

காபன் பரிசோதனைக்காக அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் ஆய்வு அறிக்கை நாளை 14 ஆம் திகதி எமக்கு அனுப்பி வைக்கப்படும். அறிக்கையானது 10 வருட காலத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருக்குமென சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

No comments