வன்னி புதூர் காட்டினுள் தேடுதல்! ஆயுதங்கள் மீட்பு! நபர் தப்பியோட்டம்!

வவுனியா வடக்கில் ஏ-9 நெடுஞ்சாலையில் மாங்குளத்திற்கும் புளியங்குளத்திற்கும் இடைபட்ட பகுதியில் அமைந்துள்ள புதூர் பகுதியில் ஆயுதங்களுடன் தலைமறைவான நபரைத் தேடுவதற்கு
இராணுவத்தினர் குவிக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புதூர் நாகதம்பிரான் ஆலயத்துக்குச் செல்லும் பிரதான வீதியில் நேற்றிரவு ஆயதங்களுடன் நபர் ஒருவர் செல்வதாகப் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தையடுத்தே குறித்த நபரைக் கைது செய்யும் நோக்குடன் புளியங்குள காவல் நிலையத்தைச் சேர்ந்த காவல்துறையினர் சிவில் உடையில் மறைந்திருந்தனர். எனினும் காவல்துறையினர் பதுங்கியிருந்ததை அவதானித்த குறித்த நபர் ஆயுதங்களை அந்த இடத்தில்  (வீதியில்) வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

குறித்த நபரால் வீதியில் வீசப்பட்ட கைக்குண்டுகள், மற்றும் கைத்துப்பாக்கி, ரவைகள், தொலைபேசி, தொலைபேசி சாஜ்சர்கள், ஈயர் போன், பல்தூரிகை, லைட்டர், வயர், கத்தரிக்கோல், சவற்காரம், ஸ்குறுட் ரைவர், நெயில் கட்டர், எண்ணெயப் போத்தல்,  எனப் பல பொருட்களைக் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

இதனையடுத்து இராணுவம்,பொலிஸார் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர், புலனாய்வுபிரிவினர், அப்பகுதியில் குவிக்கப்பட்டு குறித்த நபரை தேடும் முயற்சியில் ஈடுபட்டபோதும் குறித்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.

சுமார் 600க்கும் மேற்பட்ட படையிர் காட்டுக்குள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக அங்கிருந்த வரும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.













No comments