30ம் திகதி வவுனியாவில் பெரும்போராட்டம்?


தாயகப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு போரின் நிறைவின் பின்னரும் அதற்கு முற்பட்ட காலப்பகுதியிலும் வலிந்து கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டோரை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அமைப்பின் சார்பில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் மீட்சிக்கும், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான விடயம் சரியான முறையில் இலங்கை அரசாங்கத்தினால் கையாளப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி வவுனியாவில் மாபெரும் கண்டனப் போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது. 

எதிர்வரும் பங்குனி மாதம் இடம்பெறவுள்ள சர்வதேச மனித உரிமைப் பேரவையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நியாயமான ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு பெற்றுத்தரப்பட வேண்டும் என வலியுறுத்தி, தமிழர் தாயகத்தின் எட்டு மாவட்டங்களையும் உள்ளடக்கி எதிர்வரும் 30 ஆம் திகதி காலை 10 மணிக்கு வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அமைப்பின் பிரதிநிதிகளுக்கும் சிவில் சமூக பிரதிநிதிகளுக்கும் ,டையில் வவுனியாவில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கருத்து வெளியிட்ட வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க ஊடகப்பேச்சாளர் கே.தவராசா ,இந்தத் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இரண்டு வருடத்தை நிறைவுசெய்யவுள்ள நிலையில், எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் மனித உரிமை தொடர்பான 40 ஆவது கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.
இலங்கையில் பல தரப்பட்ட அமைப்புக்களைச் சந்தித்துள்ளதுடன், இலங்கை ஜனாதிபதியையும் சந்தித்து மகஜரைக் கையளித்திருந்தோம். அப்போது எமது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்திருந்தார். ஆனால் இன்று வரை அதனை நிறைவேற்றவில்லை.

எமக்கான தீர்வுக்கான வழிமுறைகள் பல வழிகளில் முன்வைக்கப்பட்ட போதும் ,துவரை ஐ.நா மனித உரிமை ஆணையகத்தால் நிறைவேற்றப்படாத நிலையில், மார்ச் மாதம் நடைபெறவுள்ள கூட்டத் தொடரிலாவது எங்களது கேரிக்கைகளை ஏற்றுக்கொண்டு ,லங்கை அரசிற்கு ஒரு அழுத்தத்தைக் கொடுப்பதன் மூலமாக எங்களது உறவுகளின் விடுதலையையும் எங்களுக்கான தீர்வையும் பெற்றுத்தர வேண்டும் என இதன்போது கோரிக்கை விடுத்தார்.

No comments