கொழும்புத்துறைக்கும் வருகின்றது றிசாத்தின் குடியிருப்பு?


யாழ் நகரின் புறநகர் பகுதியை இலக்குவைத்து பாரிய குடியிருப்பு திட்டமொன்றை அரச அமைச்சர் றிசாத் பதியுதீனின் வழிகாட்டலில் உருவாக்க அதிகாரிகள் முயற்சிப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பபட்டுள்ளது. கொழும்புத்துறைபகுதியில் தமிழ்க் குடும்பத்திற்குச் சொந்தமான 300 பரப்புக் காணியினை இதற்கென அடாத்தாக  சுவீகரிக்க முற்படுவதாக பாதிக்கப்பட்ட குடும்பங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.

கடந்த கால யுத்த நடவடிக்கைகளின் போது கொழும்புத்துறை பகுதி மக்கள் நடமாடுவதற்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. அதனால் அங்கிருந்த குடும்பங்கள் இடம்பெயர்ந்து வேறு இடங்களில் வாழ்ந்துவந்தனர். 

இந்தநிலையில் அக் காணிகள் உரிமைகோரப்படாத காணிகள் எனத் தெரிவித்து அதிகாரிகள் அவற்றை சுவீகரித்து வேறுபுதிய குடியேற்றத் திட்டமொன்றை உருவாக்க முற்பட்டதாக சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. 

இவ்விடயம் தொடர்பாகதெரியவருவருகையில் யாழ்ப்பாணத்தில் பயன்பாட்டில் இல்லாது அல்லது உரிமம் கோரப்படாமல் உள்ள காணிகளைச் சுவீகரித்து புதியகுடியேற்றத் திட்டங்களை மேற்கொள்வதற்கு மாவட்டச் செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த வகையில் யாழ்ப்பாண பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட கொழும்புத்துறைபகுதியில் பலகாலமாகஉரிமம் கோரப்படாது இருந்ததாக 300 பரப்புக் காணிகளைச் சுவீகரிப்பதற்கு அடையாளப்படுத்தியுள்ளனர்.
ஆனால் அதில் 80 பரப்புக் காணிதமக்குச் சொந்தமென்றும் தம்மிடம் அதற்கானஉறுதிப் பத்திரங்களும் இருப்பதாக அக் காணிகளின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் யாழ் மாவட்ட அரசஅதிபரிடமும் அவர்கள் முறையிட்டுள்ளனர். அவ்வாறுஅரசஅதிபரிடம் இதனைக் கூறியபோது காணிகளைக் கொடுத்தால் நஸ்ர ஈடு தரலாம் என்றும் அரசஅதிபர் கூறியிருக்கின்றார்.

ஆனால் தங்களுக்கு நஸ்ர ஈடுகள் எவையும் வேண்டாம் என்றும் தமது காணிகளே தமக்கு வேண்டுமென்றும் அக்காணி உரிமையாளர் அரசஅதிபரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து உங்கள் காணிகளை தவிர்த்துஉரிமம் கோரப்படாத ஏனைய காணிகளை எடுத்துக் கொள்வதாக அரச அதிபர் தெரிவித்திருக்கின்றார். இதனையடுத்ததங்கள் காணிகள் சுவீகரிக்கப்படாதெனஅக்காணியின் உரிமையாளர்கள் நம்பியிருந்தார்.

ஆனால் காணிசுவீகரிப்புச் சட்டத்தின் 20 ஆம் பிரிவின் படி அங்கு அடையாளமிடப்பட்ட இந்த 80 பரப்புக் காணி உள்ளிட்டகாணிகளைச் சுவீகரிப்பதற்கானஅளவீடு நாளை 25 ஆம் திகதிமேற்கொள்ளப் போவதாக அக் காணிஉரிமையாளருக்குஅறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. 





No comments