இந்திய மீனவரது சடலத்தை பொறுப்பேற்கிறது இந்திய தூதரகம்?


இலங்கை கடறபடையினரது தாக்குதலில் இந்திய மீனவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை மூடிமறைக்க முழு அளவில் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.இதனிடையே கடற்படையினரின் தாக்குதலில் உயிரிழந்த மீனவரின் சடலம் யாழ்.போதனாவைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கைக்கு எதிர்பார்த்திருப்பதாக தெரியவருகின்றது.

இதனிடையே இலங்கை பரப்பிற்குள் அத்துமீறி உள் நுழைந்த குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களில் குறித்த ஒருவர் உயிரிழந்தமையினால் அவருடன் பயணித்த எஞ்சிய மீனவர்கள் எண்மரும் கடற்படை முகாமிலேயே தங்க வைக்கப்பட்டு பின்னர் நேரடியாக காவல்துறையிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்பரப்பிற்குள் நேற்றைய தினம் அத்துமீறியதாக இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்ட சமயம் ஒரு படகு முழுமையாக சேதமடைந்து நீரில் மூழ்கியுழ்ளது. அதில் பயணித்த மீனவர்கள் 9 மீனவர்களும் கடலில் வீழ்ந்த நிலையில் 8பேர் மட்டுமே கடற்படைநினரால் மீட்கப்பட்டுள்ளனர். இதில் மாரிசாமி (வயது 57 )என்னும் முதியவர் காலையில் கடலில் மிதந்த நிலையில் கடற்படைநினரால் சடலமாக மீட்கப்பட்டு காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.

இதேநேரம் யாழ்ப்பாணக் கடற்பரப்பில் கைதான 17 மீனவர்களையும் தனித்தனியே இரு கட்டமாக கையளித்த நிலையில் இரு படகு மற்றும் மீன்பிடி உபகரணஙகளுடன் கையளிக்கப்பட்ட நிலையில் எஞ்சிய 8 மீனவர்களையும் படகோ அல்லது மீன்பிடி உபகரனமோ இன்றி கையளிக்க முற்பட்டபோதும் நீரியல் வளத்துறைத் திணைக்களத்தினர் கையேற்க மறுத்து விட்டனர்.

குறித்த மீனவர் ஒருவர் மரணமடைந்தமையாலேயே எஞ்சிய மீனவர்களை பொறுப்பேற்க மறுத்ததாக தெரியவருகின்றது.

இதனிடையே உயிரிழந்த இந்திய மீனவரது சடலத்தை பொறுப்பேற்று தமிழகம் அனுப்பி வைக்க யாழிலுள்ள இந்திய துணைதூதரகம் முற்பட்டுள்ளது. 

No comments