குதிரையைக் கழமிறக்குவோம் என்கிறன யானைகள்

“ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகள் ஜனாதிபதித் தேர்தலுக்காக பொது வேட்பாளர் ஒருவரைத் தெரிவு செய்வதில் இருவேறு நிலைப்பாடுகளில் இருக்கின்றன.”

– இவ்வாறு கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் வசந்த அலுவிஹார தெரிவித்துள்ளார்.

“இந்தப் பிரச்சினைகளை அவர்களால் தீர்த்துக்​கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், ஜனாதிபதித் தேர்தலுக்காக ஐக்கிய தேசியக் கட்சி சரியான குதிரையைக் களமிறக்கி வெற்றி பெறும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாத்தளை – கலேவல பிரதேசத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

“கடந்த இரு மாதகாலமாக நாடு நிலையற்ற நிலையில் காணப்பட்டது. நாம் முன்னெடுத்த அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு ஜனாதிபதியால் தடையேற்படுத்தப்பட்டது.

ஆனால், இடைநிறுத்தப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் தற்போது விரைவாக 2,3 மடங்குகளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன” – என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments