யாழில் வாகன இலக்கத் தகடுமாற்றி தொடர் வழிப்பறியில் ஈடுபட்டவன் கைது

யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக வழிப்பறி மற்றும் சங்கிலி அறுப்பில் ஈடுபட்டு  வந்த கொள்ளையர் ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் நேற்று இரவு கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் மற்றும் தென்மராட்சியின் பல்வேறு பகுதிகளிலும் வழிப்பறி மற்றும் தங்கச்சங்கிலி அறுப்பு போன்றன அண்மைக்காலங்களில் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்தது.

இவ்வழிப்பறி தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் கொள்ளையர் ஒருவரை அதிரடியாக கைது செய்துள்ளனர். 

இதன்போது வழிப்பறி கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்டு வந்த மோட்டார்ச் சைக்கிள் ஒன்றையும் உருக்கி வைக்கப்பட்டிருந்த ஆறு பவுண் தங்கத்தையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

மாவட்ட குற்றப்புலனாய்வு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் ஜே.ஜெயறோசனுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய அரியாலைப் பகுதியில் மறைந்திருந்த கொள்ளையனை உபபொலிஸ் பரிசோதகர் இ.சேந்தன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் கைது செய்துள்ளனர். குறித்த கொள்ளையருக்கு எதிராக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் மூன்று முறைப்பாடுகள்

உள்ளதாகவும் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

No comments