காவல்துறையைப் பயன்படுத்தி சம்பந்தனை வெளியேற்றுங்கள்


மகிந்­தவை எதிர்க்­கட்­சித் தலை­வ­ராக நிய­மிப்­ப­தாக சபா­நா­ய­கர் கரு ஜய­சூ­ரிய அறி­வித்த பின்­ன­ரும், எதிர்க்­கட்­சித் தலை­வர் அலு­வ­ல­கத்­தைப் பயன்­ப­டுத்தி வரும் சம்­பந்­தனை, பொலி­ஸா­ரைப் பயன்­ப­டுத்தி வெளி­யேற்­ற­ வேண்­டும் என்று மகிந்தஅணி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் வாசு­தேவ நாணயக்கார தெரி­வித்­தார்.

எதிர்க்­கட்­சித் தலை­வர் பதவி தொடர்­பில் சபா­நா­ய­கர் தடு­மா­று­கின்­றார்.

கடந்த ஆண்டு நாடா­ளு­மன்­றத்­தில் சுமுக நிலமை ஏற்­ப­டுத்­தவே மகிந்­தவை எதிர்க்­கட்­சித் தலை­வ­ராக சபா­நா­ய­கர் அறி­வித்­தாரா என்று எண்­ணத் தோன்­று­கின்­றது.

தலைமை அமைச்­சர் பதவி தொடர்­பான நெருக்­க­டி­யின்­போது சபா­நா­ய­கர் ஐக்­கிய தேசி­யக் கட்­சிக்­குச் சார்­பா­கச் செயற்­பட்­டார்.

இந்த நில­மையே தற்­போ­தும் தொடர்­கின்­றது. எதிர்க்­கட்­சித் தலை­வ­ராக மகிந்த அறி­விக்­கப்­பட்ட பின்­ன­ரும், எதிர்க்­கட்­சித் தலை­வர் அலு­வ­ல­கம் கூட்­ட­மைப்பு வசமே காணப்­ப­டு­கின்­றது.

சபா­நா­ய­கர் பொறுப்­பற்­றுச் செயற்­ப­டு­கின்­றார். உட­ன­டி­யாக பொலி­ஸா­ரைப் பயன்­ப­டுத்தி சம்­பந்­தனை வெளி­யேற்ற வேண்­டும் என்­றார்.

No comments