Header Shelvazug

http://shelvazug.com/

தேர்தல் மேடைக்குத் தயாராகும் கூட்டமைப்பின் நவீன ‘டீல்’ நாடகம் - பனங்காட்டான்

உயிரைக் காப்பாற்றவே விடுதலைப் புலிகளுடன் அன்று டீல் செய்ய நேர்ந்தது என்று சுமந்திரனும் அவரது கையாள் சயந்தனும் சொல்வது உண்மையானால், முள்ளிவாய்க்காலின் பின்னர் அந்த டீலைக் கைவிட்டு, கூட்டமைப்பைக் கலைத்து, தமிழரசுக் கட்சி என்ற பெயரில் தனித்து தேர்தலில் போட்டியிட இவர்கள் தயங்குவது ஏன்?

அண்மையில் எனது நண்பர் ஒருவர் மின்னஞ்சல் ஒன்றை எனக்கு அனுப்பி இருந்தார்.

பொலிரிக்ஸ்  (Politics) என்பது லத்தீன் வார்த்தை என்றும், அதற்கான விளக்கத்தையும் குறிப்பிட்டிருந்தார். பொலி என்றால் பல என்று அர்த்தம். ரிக்ஸ் என்றால் இரத்தத்தை உறிஞ்சும் உயிரினம் என்று பொருள்.

இதனை உறுதி செய்த பின்னர் அரசியல்வாதிகள் பற்றிய அபிப்பிராயம் என்னால் புரிந்துகொள்ளக் கூடியதாக இருந்தது.

அரசியல் செய்பவர் பாவம் புண்ணியம் பார்க்காது, நீதி நியாயமின்றி அப்பாவி மக்களை ஏதோ ஒரு வகையில் உறிஞ்சி உயிர் வாழ்பவர்கள் என்பதைப் புரிந்துகொள்ள இதற்கு மேல் என்ன வேண்டும்?

தங்கள் சுயதேவையை நிறைவேற்ற அரசியல்வாதிகள் எந்தப் பொய்யையும் பயம்pன்;றிச் சொல்வார்கள். தாங்கள் சொல்வது உண்மை என்று நிரூபிக்க நாக்கூசாது மேலும் மேலும் பொய் சொல்வார்கள்.

இலங்கையில், அது தெற்காக இருந்தாலென்ன வடக்காக இருந்தாலென்ன உருட்டும் புரட்டுமாக அரசியல்வாதிகள் தங்களை வாலாயமாக்கி விட்டார்கள்.

2019ஆம் ஆண்டு பிறந்து விட்டது. அடுத்தடுத்து மூன்று தேர்தல்களை அரசியல்வாதிகள் சந்திக்கத் தயாராகி விட்டார்கள்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைத் தேர்தல்கள் தமிழரைப் பொறுத்தவரையில் முக்கியமானவை. தமிழ் அரசியல்வாதிகளைப் பொறுத்தவரையில் நாடாளுமன்றத் தேர்தல் மிகவும் முக்கியமானது.

ஜனாதிபதியின் பதவிக் காலம் முடிய இன்னமும் சரியாக ஒரு வருடம் உள்ளது. அரசியல மைப்பின் பிரகாரம் நான்கு வருடத்தைப் பூர்த்தி செய்தால், எப்போதும் அடுத்த தேர்தலை நடத்தலாம்.

இதன் பிரகாரம் இந்த மாதம் 8ம் திகதிக்குப் பின்னர் எப்பொழுதும் அடுத்த ஜனாதிபதித் தேர்தல் நடைபெறலாம். மகிந்த ராஜபக்ச நாளும் கோளும் பார்த்து தனது நான்காவது ஆண்டு முடிவில் ஜனாதிபதித் தேர்தலை நடத்தியதால் எற்பட்ட விளைவு மைத்திரிக்கு நல்லதொரு பாடம்.

மகிந்த மீண்டும் நாடளுமன்ற உறுப்பினராகி, அதன் பின்னர் 52 நாட்கள் பிரதமராகி, இப்போது எதிரக்;கட்சித் தலைவராகி (?) படும் க~;டம் கொஞ்சம் அல்ல.

ரணில் விக்கிரசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கி மகிந்தவை பிரதமராக்கியபோது மைத்திரிக்கும் மகிந்தவுக்குமிடையே ஒரு டீல் (உடன்பாடு, ஒப்பத்தம், பேரம்) மேற்கொள்ளப்பட்டது.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரியை எதிர்த்து மகிந்த தரப்பு போட்டியிடாது என்பது அந்த டீல்.

மறுபுறத்தில், மகிந்தவுக்கு ஆதரவாக ஐக்கிய தேசியக் கட்சியினரை கொள்முதல் செய்ய மேற்கொள்ளப்பட்ட டீல் (பண பேரம்) பிழைத்ததால், மகிந்த – மைத்திரி டீல் சறுக்கியது. இதனால் மகிந்த பதவியிழந்தார்.

அதேசமயம், ரணிலைக் காப்பாற்றி அவரை மீண்டும் பிரதமராக்;குவதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் அவர்களுடன் ஒரு டீல் செய்தனர். இது எழுத்தில் இல்லை. ஆயினும், கனவான்கள் டீல் என அப்போது சொல்லப்பட்டது.

ரணிலுக்கு மீண்டும் பிரதமர் பதவி கிடைக்க கூட்டமைப்பின் 14 கைகளும் பகிரங்கமாக உதவின. ஆனால் அவர்களின் டீல் மட்டும் பரமரகசியம்.

ரணிலை மீண்டும் பிரதமராக நியமிப்பதற்கு முதல்நாள,; சபாநாயகர் கரு ஜெயசூரியவின் வீட்டில் மைத்திரியும் ராணிலும் சந்தித்து பேச்சு நடத்தினர்.

அவ்வேளை அங்கும் ஒரு ரகசிய டீல் செய்யப்பட்டது.

ரணில் மீண்டும் பிரதமராக பதவியேற்பதானால், மகிந்தைவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க வேண்டும் என்பது அந்த டீல்.

இதனை கரு ஜெயசூரிய கச்சிதமாக செய்து முடித்தார். இந்தச் செயற்பாடு கூட்டமைப்பு முற்றிலும் எதிர்பாராதது. கூட்டமைப்பின் பேச்சாளார் சுமந்திரன் இதனை ஒரு சட்டப் பிரச்சனையாக  கிளப்பினார். தன்னைக் காப்பற்றிய கூட்டமைப்புக்கு ஆதரவாக ரணில் செயற்படவில்லை.

எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்காக கூட்டமைப்பு நீதிமன்றத்தை நாடாது என்று தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அறிவித்துள்ளார்.

மைத்திரியும் கரு ஜெயசூரியவும் செய்துகொண்ட டீல் கூட்டமைப்புக்குத் தெரிந்து விட்டதால் இப்படியான முடிவுக்கு தமிழரசுக் கட்சி வந்ததாக யூகிக்க முடிகிறது.

தாங்கள் ஆதரித்த ரணில் பிரதமரானதால், புதிய அரசியலமைப்பு அடுத்த மாதம் 4ம் திகதிக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று கூட்டமைப்பு சொன்னதுகூட சிதறடிக்கப் பட்டுவிட்டது.

சுமந்திரன் கூறி வரும் ஒருமித்தநாடு கிடையாது என்றும், மூன்று மொழிகளிலும் ஒற்றையாட்சி என்றே இடம்பெறுமென்றும் ரணில் மட்டுமன்றி அவரது கட்சியும் கூறிவிட்டது.

மைத்திரியின் சுதந்திரக் கட்சி, மகிந்தவின் பொதுஜன முன்னணி, ஜே.வி.பி என்பவை புதிய அரசியலமைப்பே கிடையாது என்று அறிவித்து வருகின்றன.

இந்த ஆட்சியிலும் தமிழர் பிரச்சனைக்கு எந்தத் தீர்வும் இல்லை என்பது தெரியவந்துவிட்டது.

அக்டோபர் 26ம் திகதி சிங்கள தேசிய பிரச்சனையை தீர்த்தவர்கள் தமிழ்த் தேசியவாதிகளான கூட்டமைப்பு என்று அவர்கள் பெருமைகொள்ளும்போதிலும்,  கடைசியில் 70 ஆண்டு காலம் போல தமிழர்கள் ஏமாற்றப்பட்டு விட்டார்கள்;.

இதனால், தங்கள் தோல்வியைத் திசைதிருப்ப சுமந்திரனும் அவரது அடியாளான சயந்தனும் புதிய ஒரு டீல் கதையை அவிழ்த்து விட்டுள்ளனர்.

விடுதலைப் புலிகள் அடுத்தடுத்து தமிழ்த் தலைவர்களை கொலை செய்த காரணத்தால், கொலைகளிலிருந்து தப்புவதற்காகவே அவர்களுடன் தாங்கள் டீல் செய்ததாக சயந்தன் கொழும்பில் கம்பன் கழக விழாவில் உரையாற்றும்போது கூறியுள்ளார்.

இதுபற்றி யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் காலைக்கதிர் பத்திரிகை தனது இந்த மாத 3ம் திகதி இதழில் பின்வருமாறு எழுதி உள்ளது!

“இப்படி வாயைக் கொடுத்து பிரச்சனை கிளப்ப வேண்டாம் என்று அவருக்கு அட்வைஸ் சொல்வதில்லையா என்று ஒரு கேள்வியை சுமந்திரனிடம் தூக்கிப்போட்டேன். உண்மை பேசுபவர்களை உண்மை பேச வேண்டாம் என்று நான் மறிக்கலாமா என்று சுமந்திரன் கேட்டார். டீல் விவகாரப் பேச்சுக்கான ஆயத்தடீல் எங்கு என்பது அப்போதுதான் எனக்குப் புரிந்தது” என்று இதில் எழுதப்பட்டிருந்தது.

டீல் விவகாரத்தின் உண்மையை இந்தப் பகுதி நன்கு புரியவைக்கிறது.

விடுதலைப் புலிகளுடன் தமிழர் தரப்பு டீல் செய்த காலத்தில் சுமந்திரனோ சயந்தனோ அரசியலில் இருக்கவில்லை. அப்படியிருக்க அந்த டீல் பற்றி இவர்கள் எவ்வாறு கூறமுடியும்?

உயிருக்குப் பயந்தே விடுதலைப் புலிகளுடன் டீல் செய்தார்கள் என்றால், முள்ளிவாய்க்;காலில் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட பின்னர,; கூட்டமைப்பைக் கலைத்துவிட்டு, தமிழரசுக் கட்சி என்று தனித்துத் தேர்தலில் போட்டியிட ஏன் அஞ்சுகிறார்கள்?

1994 மற்றும் 2000 ஆண்டு தேர்தல்களில் திருமலையில் படுதோல்வியடைந்த சம்பந்தன், 2001ம் ஆண்டுத் தேர்தலில் விடுதலை புலிகளுடனான டீல் ஊடகவே மீண்டும் வெற்றி பெற்றார் என்பதை இவர்கள் ஒப்புக்கொள்வர்களா.?

அரசியலில் நெருக்குதல்களைச் சந்திக்கும் வேளையில் இப்படி நிரூபிக்க முடியாத டீல் கதைகளை அவிழ்த்துவிட்டு, அதில் குளிர்காய முனையக் கூடாது. விரைவில் மூன்று தேர்தல்கள் வரவுள்ளன என்பதை மக்கள் அறிவார்கள்.

No comments