ஆபத்தான வாக்குறுதி எதுவும் கூட்டமைப்பிற்கு கொடுக்கவில்லை


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைப் பெறுவதற்காக, அரசாங்கம், நாட்டுக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய எந்த வாக்குறுதியையும் கொடுக்கவில்லை என்று சிறிலங்காவின் போக்குவரத்து மற்றும் சிவில் விமானத்துறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

“பிரிவினைவாதம் அல்லது இனப் பிளவுகளைத் தூண்டிவிடும் செயல்களில் அரசாங்கம் ஈடுபட்டால், அரசாங்கத்துடன் இணைந்து செயற்படமாட்டேன்.

தனிநாட்டை உருவாக்கிக் கொடுப்பதாக கூட்டமைப்புக்கு அரசாங்கம் வாக்குறுதி கொடுத்திருப்பதாக, பரப்பப்படும் வதந்திகளில் உண்மையில்லை.

ஆனால் நாட்டைப் பிளவுபடுத்த, கூட்டமைப்புக்கு அரசாங்கம் அனுமதி அளித்திருப்பதாக குறிப்பிட்ட சிலர் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்.

வடக்கு மக்களின் பல்வேறு பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கத்தின் ஆதரவை கூட்டமைப்பு எதிர்பார்க்கிறது.

நாட்டைப் பிளவுபடுத்தும் எந்தக் கோரிக்கையையும், கூட்டமைப்பு ஒருபோதும் முன்வைக்கவில்லை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments