யாழ் போதனா வைத்தியசாலையில் 600 மில்லியன் செலவில் விபத்து சிகிச்சைப் பிரிவு

600 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட விபத்து சிகிச்சைப் பிரிவு எதிர்வரும் மாசி மாதம் 7ம் திகதி மத்திய சுகாதார. அமைச் சர் ராஜிதசேனாரட்னாவினால் திறந்து வைக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தி யசாலைப் பணிப்பாளர் எஸ்.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட அவசர விபத்து சிகிச்சைப் பிரிவு மத்திய சுகா தார அமைச்சரால் திறந்து வைக்கப்படவுள்ளது.இவ்வாறு ஆரம்பிக்கப்படும் விபத்து சிகிச்சைப் பிரிவில் 100 கட்டில் வச  திகளுடன் 3 சத்திர சிகிச்சைக் கூடங்களும் காணப்படும்.

அதேபோல் அவசர சிகிச்சைக் கூடமும் இங்கே காணப்படும் இதன் மூலம் விபத்தில் காயமடையும் நோயாளர்கள் நேர டியாகவே இந்த விடுதியில் அனுமதிக்கப்படுவதோடு சாதாரண நோயாளர்கள் மற்றும் குணமடையும் நோயாளர்களும் நேரடியாகவே வெளியேறும் வசதிகளும் ஏற்படுத்தப்படும். எனத் தெரிவித்தார். 

No comments