ஒருமித்த நாடு என்பது சமஷ்டி அல்ல-லபக்கு டக்லஸ்

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கூறுவதுபோல் ஒருமித்த நாடு என்பது சமஷ்டி அல்ல, அது ஒற்றை ஆட்சியே. வார்த்தை ஜாலங்கள் தமிழ் மக்களையும் சிங்கள் மக்களையும் ஏமாற்றும் செயலே என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார் .
பருத்தித்துறையில் நடைபெற்ற கட்சியின் பிரதேச செயற்பாட்டளர்கள், பொறுப்பாளர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்- தற்போது தென்னிலங்கையில் ஏற்பட்டுல்ல அரசியல் இழுபறி நிலமையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கையாண்ட விதமானது தமிழ் மக்களை மேலும் பல சிக்கல்களுக்குள்ளேயே கொண்டு சென்றுள்ளது.
அரசியல் குழப்பத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் நலன்களை முன்னிறுத்தி செயற்படாமல், தமது சுயநலன்களை முன்னிறுத்தி ஒருபக்க சார்பாக செயற்பட்டதால் தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கான சந்தர்ப்பம் மீண்டும் அடிபட்டு போகும் நிலையே காணப்படுகின்றது. தமிழ் மக்களின் அபிலாசைகளை வென்று தருவதாக கூறி பொய்யான கருத்துக்களை பரப்பச்செய்து மக்களை ஏமாற்று செயற்பாடுகளை தமிழ்தேசிய கூட்டமைப்பு தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றது.
ஒருமித்த நாடு என்றால் சமஷ்டி என்று கூறி மக்களை ஏமாற்ற முற்படுகின்றனர். ஆனால் ஒருமித்த நாடு என்பது சமஷ்டி அல்ல. அது ஒற்றை ஆட்சியே என நாம் ஆரம்பத்திலிருந்தே கூறி வருகின்றோம் என டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

No comments