முள்ளியவளை கிராமத்திற்குள் வெள்ளம் வரவில்லையாம்-ரூபாவதி!

முல்லைத்தீவு, கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட முள்ளியவளை கிராம மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வதற்கு குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
வெள்ள நிவாரணத்தில் முள்ளியவளை பிரதேச மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்தாக எழுந்துள்ள முறைப்பாடுகளை அடுத்தே அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பணிப்புரையின் பேரில் குறித்த குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் முள்ளியவளை பிரதேச மக்களின் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆராய்வதற்கென அதிகாரிகள் கொண்ட குழு ஒன்றை குறித்த பிரதேசத்திற்கு அனுப்பிவைத்துள்ளதாகவும் அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், “இந்தப் பிரதேசம் உண்மையில் வெள்ளத்தின் நேரடிப் பாதிப்புக்கு உள்ளாகவில்லை. எனினும், பெருமழையினால் முள்ளியவளையில் கசிந்துவரும் நீரூற்றுக்களின் காரணமாகவே மக்கள் பாதிக்கப்பட்டனர்.
அது தொடர்பில் ஆராய்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது...

No comments